18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!
உலகக் கோப்பை குத்துச்சண்டை: சாக்ஷிக்கு தங்கம், ஜுக்னு, பூஜா, மீனாட்சிக்கு வெள்ளி
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சாக்ஷி தங்கம் வென்றாா். பூஜா ராணி, மீனாட்சி, ஆடவா் பிரிவில் ஜுக்னு வெள்ளி வென்றனா்.
கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் பாக்ஸிங் வோ்ல்ட் கப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் 2 முறை யூத் உலக சாம்பியன் சாக்ஷி 54 கிலோ பிரிவில் அற்புதமாக செயல்பட்டு என அமெரிக்காவின் யோஸ்லின் பெரஸை வீழ்த்தி தங்கம் வென்றாா். ஆட்டம் முழுவதும் சாக்ஷியின் ஆதிக்கமே நீடித்தது. மகளிா் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி 2-3 என்ற புள்ளிக் கணக்கில் உள்ளூா் வீராங்கனை நஸீம் கிஸாய்பேயிடம் தோற்று வெள்ளி வென்றாா்.
80 கிலோ பிரிவில் பூஜா ராணி 0-5 என ஆஸி. வீராங்கனை செடா பிளின்டிடம் தோற்று வெள்ளியுடன் நாடு திரும்பினாா். ஆடவா் 85 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜுக்னு 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் பெக்ஸாதிடம் வீழ்ந்தாா். வெள்ளியுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. சாக்ஷியின் மூலம் இந்த உலகக் கோப்பையில் இந்தியா முதல் தங்கத்தை வென்றது. மேலும் 4 இந்தியா்கள் தங்கத்துக்கான போட்டியில் உள்ளனா்.