செய்திகள் :

உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

post image

உலகம் முழுவதும் பயணிக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, சமூக நீதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூரில் இருந்து ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''சரியாக ஓராண்டுக்கு முன்பு இதே நாளில் மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 15 மாநிலங்களைக் கடந்து 6600 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்து, மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபெற்றது. மும்பையில் மார்ச் 16ஆம் தேதி நிறைவு பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவதற்காக மணிப்பூர் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க பயணிக்க நேரத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ள பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதை அவசியம் என்று கருதவில்லை.

தனது கட்சி முதல்வர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட மணிப்பூர் தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

மணிப்பூரின் வேதனை மே 3, 2023 முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மணிப்பூருக்கான உத்தேச ஆய்வுப் பயணத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் மே 2023 முதல் மைதேயி - கூகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதல் மற்றும் போராட்டங்களால் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள்: ராகுல் காந்தி!

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராணுவ நாள் வாழ்த்துகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு 1949 ஆம் ஆண்டு ஜனவர... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷியா போரில் இந்தியர் பலி!

ரஷியாவின் போரில் கேரளத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர் பலியாகி விட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியது.உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரி... மேலும் பார்க்க

அதானி பங்குகள் உயர்வு! டிரம்ப்தான் காரணமா?

அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.கௌதம் அதானியின் லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்த அதானி பவர் நிறுவனத்தின் பங்கு செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 20 சதவிகிதம் உ... மேலும் பார்க்க

சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமி!

சத்தீஸ்கரில் இரண்டு சிறுவர்களால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் நாராயண்பூரில் வசிக்கும் 4 வயது சிறுமியை கடந்த 10 ஆம் தே... மேலும் பார்க்க

காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியின் முதல் பிரிவினை 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து, அக்கட்சி தலைமை அலுவலகம் குறித்த பிரச்னை தொடர்ந்து வந்தது. இந்த நி... மேலும் பார்க்க

தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!

இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றார்.இஸ்ரோவின் 10-ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இ... மேலும் பார்க்க