சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா
உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி
India Emerging as Global Tech Leader, Says PM Modi
புதுதில்லி: உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 11 ஆம் நாள், நமது பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் தொழில்நுட்ப சாதனைகளை கவனப்படுத்தக் கொண்டப்படுகிறது.
இந்த நாளை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
இந்த நாளையொட்டி நமது விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது: ராஜ்நாத் சிங்
நமது விஞ்ஞானிகளுக்கு தேசிய தொழில்நுட்ப நாள் வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை மற்றும் நன்றி தெரிவிக்கவும், 1998 இல் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் சோதனைகளை நினைவுகூரவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவை நாட்டின் வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக நாட்டின் தன்னம்பிக்கைக்கான தேடலில் ஒரு முக்கிய நிகழ்வாகும் உள்ளன.
நமது மக்களால் இயக்கப்படும் இந்தியா, விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, பசுமை தொழில்நுட்பம் மற்றும் பல தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் உலகளாவிய மையமாக வளர்ந்து வருவதாக மோடி குறிப்பிட்டார். அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை அவர் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று பிரதமர் கூறினார். தொழில்நுட்பம் மனிதகுலத்தை உயர்த்தும், தேசத்தைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.