செய்திகள் :

உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சி, மாவ்சின்ராமில் தண்ணீர் பஞ்சம் வர என்ன காரணம்?

post image

சில நாள்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள கிராமம் ஒன்றில், பெண்கள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் வீடியோ வைரலானது.

அந்தக் கிணற்றுக்குள்ளும் 'ஆஹா... ஓஹோ' என்று தண்ணீர் இருந்துவிடவில்லை. நமது சாலைகளில் இருக்கும் குண்டும், குழிகளில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி இருக்கும் அல்லவா... அதே அளவிலான தண்ணீர் தான் அந்தக் கிணற்றில் இருந்தது.

ஞானசூரிய பகவான்
ஞானசூரிய பகவான்

அது குறித்து, 'மோடி ஜி பாணி லாவோ ஜி' புத்தகத்தின் ஆசிரியர் ஞானசூரிய பகவானிடம் பேசினோம். அவர் கூறியதாவது,

"மகாராஷ்டிராவில் இருக்கும் நாசிக் கோதாவரி நதிக்கரையில் இருக்கிறது. நாசிக்கில் இருந்து 30 கி.மீக்கு முன்பு தான் இந்த நதியே தொடங்குகிறது.

இந்தப் பகுதியின் கீழ் எரிமலை குழம்பு ஓடுகிறது என்று கூறுகிறார்கள். மேலும், இது கரிசல் மண் பூமி. இதனால், இந்த மண்ணில் வளங்கள் அதிகம் இருக்குமே தவிர, இவை நீரை வடிகட்டாது.

இந்தப் பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 500 - 3,500 மி.மீ ஆகும். தமிழ்நாட்டின் மழை அளவை விட மிக அதிகம் தான் இது.

இந்த மழை அளவை வைத்து பார்க்கும்போது, நாசிக் மாநிலத்தில் ஏற்பட்ட அந்தப் பஞ்சம் செயற்கையானது என்பது என்னுடைய கருத்து. காரணம், அங்கே கிட்டதட்ட 6 ஆறுகள் ஓடுகிறது.

செயற்கையானது என்றால் அங்கே நீர் மேலாண்மை சரியாக இல்லாமல் இருக்கலாம். வைரலான வீடியோவை பொறுத்தவரை, நாசிக்கில் ஏதோ ஒரு இடத்தில் அந்த நிலைமை இருக்கலாமே தவிர, அனைத்து இடங்களிலும் அது இருக்காது.

இந்தியாவின் தேசிய தண்ணீர் அறிக்கையின் படி, நாசிக்கில் சில இடங்களில் தான் தண்ணீர் பிரச்னை உள்ளது.

'மழை அதிகமாக பெய்கிறதே, அப்புறம் ஏன் தண்ணீர் பிரச்னை?' என்ற கேள்வி எழும். இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.
சிரபுஞ்சி
சிரபுஞ்சி

உலகத்திலேயே அதிக மழை பெய்யும் இடம் என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த இடம் மேகாலயாவில் உள்ள 'சிரபுஞ்சி'. இங்கே ஒரு ஆண்டு மழையின் சராசரி அளவு 11,444 மி.மீ.

இப்போது, உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் என்று கூறப்படும் இடம் அதே மேகாலயாவை சேர்ந்த 'மாவ்சின்ராம்'. இங்கே ஒரு ஆண்டுக்கு பெய்யும் மழையின் சராசரி அளவு 11,872 மி.மீ.

ஆனால், இவ்வளவு மழை பெய்யும் இடங்களிலும் மழை காலங்களைத் தவிர்த்து ஆண்டுக்கு 6 மாதங்கள் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. அதனால், அந்த மாதங்களில் மலையின் கீழே இருந்து லாரிகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்ன?

காரணம், மழை அதிகளவில் பெய்கிறது தான். ஆனால், அதை மக்கள் சேமிப்பதில்லை. அது ஒரு மலை பிரதேசம் என்பதால் மழை தண்ணீர் அப்படியே கீழே ஓடிவிடுகிறது.

சிரபுஞ்சியில் ஆறுகள் உள்ளது. ஆனால், அதற்கு கீழே நிலக்கரி சுரங்கங்கள் உள்ளதால், அந்த நீரை மக்களால் பயன்படுத்த முடியாது.

தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றால் இலவசமாக அல்ல... கட்டணத்திற்கு தான்.

இப்படி அவர்கள் பிரச்னைகளை சந்திக்காமல் இருக்க ஒரே தீர்வு, 'கூரை நீர் அறுவடை'. இஸ்ரேலில் இருந்து மக்கள் வந்து இதை சொல்லி கொடுக்கிறார்கள். கூரை நீர் அறுவடையை நம் வீடுகளிலும் செய்யலாம்.

மழை
மழை

இந்தியாவில் பெய்யும் மழை அளவு என்ன?

அதனால், எங்கு எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் எப்போதும் நமக்கு கிடைக்க வேண்டுமானால் எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1,250 மி.மீ அளவு மழை பெய்கிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு 4,000 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தண்ணீர் கிடைக்கிறது.

இதில் 17.5 சதவிகிதம் ஆவியாக போய்விடுகிறது. 17.5 சதவிகிதம் தண்ணீர் நிலத்தில் ஓடி நமக்கு பயன்படாமல் வீணாகிவிடுகிறது. நிலத்தடி நீராக 10.75 சதவிகிதம் தான் சேமிப்பாகிறது. விவசாயம், தொழிற்சாலை, வீட்டு பயன்பாடு போன்றவற்றிற்கு 7.5 சதவிகிதம் தான் தண்ணீர் பயன்படுகிறது. மீதி தண்ணீர் ஆற்றில் போய் சேருகிறது.

நாம் சரியாக நீர் மேலாண்மையை கடைபிடித்தால் இன்னும் 7.5 சதவிகித தண்ணீரை நமது தேவைகளுக்காக சேமிக்க முடியும். அப்படி செய்தால், தண்ணீர் பஞ்சம் இந்தியாவில் எட்டியே பார்க்காது" என்கிறார்.

சிறந்த செயல்திறனுக்காக `சன்சத் ரத்னா விருது' - திமுக எம்.பி. உள்பட 17 பேர் தேர்வு! - முழு விவரம்!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை மதிப்பளிக்கும் விதமாக சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2010-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பரி... மேலும் பார்க்க

Trump:``பாகிஸ்தான் மக்கள் புத்திசாலிகள்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்! - காரணம் என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கில் இருநாடுகளுடனும் வர்த்தகத்தை முன்வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தகக்... மேலும் பார்க்க

``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்களை சாடும் எடப்பாடி

ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எ... மேலும் பார்க்க

``புற்றுநோயால் அவதிப்படும் ஜோ பைடன் நலம் பெற வேண்டுகிறோம்'' - ட்ரம்ப், கமலா ஹாரிஸ், ஒபாமா பதிவு

அமெரிக்கவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 1942-ம் ஆண்டு நவம்பர்-20 ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 82. இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சிக்கல்கள... மேலும் பார்க்க