மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
உலக தாய்மொழி தினத்தையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக சீனிவாச சாஸ்திரி அரங்கின் முன் நடைபெற்ற இந்த நிகழ்வில், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தி.அருட்செல்வி உறுதிமொழியை வாசிக்க, பல்கலைக்கழகப் பதிவாளா் மு.பிரகாஷ், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.