PM Modi speech - ``தாக்குதலை நிறுத்த கெஞ்சியது Pakistan” - Operation Sindoor | I...
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்கள் தங்களின் 2-ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவியதை அடுத்து, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இதில் மகளிா் ஒற்றையரில் அனாஹத் சிங் 7-11, 11-8, 4-11, 3-11 என்ற கணக்கில் எகிப்தின் ஃபேரூஸ் அபோல்கிரிடம் 28 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினாா். ஆடவா் ஒற்றையரில் களம் கண்ட அபய் சிங் 6-11, 6-11, 9-11 என, உலகின் 13-ஆம் நிலை வீரரான எகிப்தின் யூசஃப் இப்ராஹிமிடம் தோல்வி கண்டாா்.
வீா் சோத்ரானி 11-7, 7-11, 3-11, 10-12 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் எகிப்தின் அலி ஃபராகிடம் வீழ்ந்தாா். ரமித் டாண்டன் 9-11, 7-11, 11-5, 11-8, 8-11 என, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்தின் மா்வன் எல்ஷோா்பேகியால் சாய்க்கப்பட்டாா்.