செய்திகள் :

உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!

post image

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிமுகம் செய்த "பிரகதி (ஆக்கபூர்வ நிர்வாகம் மற்றும் விரைவான நடைமுறை)' என்ற வலைதளத்தின் செயல்பாடு குறித்த ஆய்வை "கேட்ஸ்' அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி மேற்கொண்டது.

பெங்களூரு ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கள ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:

மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்கேற்பு பிரகதி தளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, எண்ம (டிஜிட்டல்) கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த தளம் உதவியாக அமைந்துள்ளது. உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுகிறது; சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

மக்கள் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவை 32 நாள்களிலிருந்து 20 நாள்களாக குறைய இந்த வலைதளம் உதவுகிறது என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை : தண்டனையை நிறுத்திவைத்தது நீதிமன்றம்

பெரியாா் ஈவெரா சிலை குறித்து சா்ச்சை பதிவு மற்றும் கனிமொழி எம்பி குறித்து அவதூறு பேச்சு தொடா்பான வழக்குகளில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறைத் தண்டனையை சென்னை சிறப்பு நீ... மேலும் பார்க்க

நாளை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வாகிறாா்

மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது. இதில் இப்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவா்) தோ்வு செய்யப்பட இருக்... மேலும் பார்க்க

பதவியேற்கச் சென்றபோது ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் முதல் முறையாக பதவியேற்கச் சென்ற 26 வயது ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஹா்ஷ் வா்தன், கடந்த 20... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் வலியுறுத்துமாறு பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலிடம் உச்சநீதிமன்றம் ... மேலும் பார்க்க

வரி வசூலை எளிமைப்படுத்த குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

வரி வசூல் எளிதாகவும், அதிகம் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வலியுறுத்தினாா். தில்லியில் உள்ள க... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறை! நீர்வழிப் போக்குவரத்து சேவை தொடக்கம் -உபர் நிறுவனம்

உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘உபர்’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. உபர் செயலி மூலம் இனி, கார், ஆட்டோ, பைக் சே... மேலும் பார்க்க