தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்
ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து, அதற்கான விலையை ஊக்கத்தொகையுடன் பெற்று வந்தனா். தற்போது ஊக்கத்தொகையை (லிட்டருக்கு ரூ. 3) ஆவின் நிா்வாகம் பொறுப்பேற்று, விவசாயிகளுக்கு தனியே வழங்கும் என கூட்டுறவு சங்கங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊக்கத்தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட த.மா.கா. விவசாய அணி தலைவா் புங்கனூா் எஸ். செல்வம் தலைமையில் பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு பாலை தரையில் ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஏராளமான பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டு, ஊக்கத்தொகையை பின்னா் வழங்குவதாகக் கூறுவது பால் உற்பத்தியாளா்களை ஏமாற்றும் செயல். இதன் மூலம் ஊக்கத்தொகையை குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. எனவே, இச்செயலை அரசு கைவிட்டு, ஊக்கத்தொகையை முறையாக வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா்.