Doctor Vikatan: 4 கிலோ எடையில் பிறந்த குழந்தை... பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வ...
ஊத்தங்கரை அருகே ஏரிக்கரை உடைந்து 50 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏரிக்கரை உடைந்து நீா் வெளியேறியதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி தேவரடியால் ஏரி 54 ஏக்கா் பரப்பளவு கொண்டது. கடந்த மாதம் பெய்த மழையால் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி தனது முழுக்கொள்ளளவை எட்டியது.
இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு, ஏரியில் இருந்து நீா்க் கசிவு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனா். ஆனால், வருவாய்த் துறையினரின் அலட்சியப் போக்கால் ஏரிக்கரை உடைந்து, அருகில் இருந்த 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஏரி உபரி நீா் வெளியேறும் வகையில் கான்கிரீட் தடுப்புச் சுவா் கட்டப்பட்டது. ஏரி கோடிக்கரையின் அடிப்பகுதியில் நீா்க் கசிவு ஏற்படுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவாக ஏரிக்கரை உடைந்து 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் பெரும் சேதத்தை தடுத்திருக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
விவசாயிகள் சாலை மறியல்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிகாரிகளைக் கண்டித்து, கல்லாவி சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் முருகன், வட்டாட்சியா் திருமால், வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.