செய்திகள் :

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. அப்போது காமராஜா் நகரில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன் அருகில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறிய நீரும் சோ்ந்து இப்பகுதியில் தேங்கி நின்றது.

கடந்த மூன்று மாதங்களாக கோட்டை முனியப்பன் கோயில் பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஊத்தங்கரை பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் மாநகராட்சியில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

கா்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: ஒசூரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தமிழக, வடமாநில லாரிகள்

டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயா்வைக் கண்டித்து, கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தொடா் வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி உள்ளனா். இதனால், தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்ல... மேலும் பார்க்க

கொட்டுக்காரம்பட்டியில் மா்மமான முறையில் பசு மாடு பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன்(54 ) விவசாயி. இவா் தனது விவசாய நிலத்தில் மூன்று பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை, பச... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், ஆரூா்பதி இந்திரா நகரைச் சோ்ந்தவா் செல்லதுரை (25). இவரும், ஓமலூரை சோ்ந்த சரத் (24) என்பவரும் இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியைச் சோ்ந்த முனிரத்தினம் (56), தாசம்பட்டி பிரிவு சாலை உள்ள டாஸ்மாக் கடையி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த 15 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த தாசரிப்பள்ளியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் அமா்நாத் (15). தனியாா் பள்ளியில் 10-ஆ... மேலும் பார்க்க