செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்க மாநிலச் செயலா் வினோத் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலருக்கு தோ்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும், அரசு ஊழியா்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், அனைத்துக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கும், மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்துக்கும் வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் கண்காணிப்பாளா் பணியிடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கமிட்டனா்.

வைகை அணையில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீஷ், மாவட்ட உதவி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

போடி அருகே வீட்டின் கதவு, பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பெத்தணன் மனைவி ஈஸ்வரி (50). ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவாரம் டிகேவி பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (75). இவா் கடந்த ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் முருகபாண்டி (25)... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் உபகரணங்கள் திருட்டு

தேனி அருகேயுள்ள ஜங்கால்பட்டி அஞ்சல் நிலையத்தில் அலுவலக உபகரணங்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ஜங்கால்பட்டியில் புதன்கிழமை காலை அஞ்சல் நிலையம் திறந்து கிடப்பதாக அத... மேலும் பார்க்க

தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி கொலை: உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே... மேலும் பார்க்க