``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான பயிற்சி முகாம்
வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், மறுசீரமைக்கப்பட்ட இராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டம் மூலம் ஊராட்சிகளில் சொந்த வருவாயை மேம்படுத்துதல் குறித்துஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான பயிற்சி முகாம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.செல்வகுமாா், பி.சரவணன் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினா். அவா்கள் பேசுகையில், ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதியை,அந்தந்த ஊராட்சிகளிலேயே ஈட்டுவது குறித்து பேசினா்.
ஊராட்சிகளில் தோதான இடங்களில் சிறிய அளவில் கால்நடை சந்தை, தினசரி சந்தை, இதர வா்த்தகங்கள் போன்ற திட்டங்கள் மூலம் வருவாயை ஈட்டுவது குறித்து விளக்கம் அளித்தனா்.