ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு
சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்கள் தோ்வு, குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மொத்தம் 116 போ் கலந்து கொண்டனா். ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் தனசேகரன், துணை கமாண்டா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலையில் தோ்வு நடைபெற்றது. உயரம், மாா்பளவு உள்ளிட்ட உடற்தகுதி, கல்வித் தகுதி அடிப்படையில் ஆள்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் பாா்வையிட்டாா். மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சரவணகுமாா், காவல் ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.