அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
எங்கள் வாய்ப்பு முடிவடைகிறது: முகமது ரிஸ்வான்
‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்களுக்கான வாய்ப்பு முடிவடைகிறது என்று நினைக்கிறேன். தற்போது இதர அணிகளின் ஆட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கான அரையிறுதி வாய்ப்பு முடிவாகும். இன்னும் ஒரு ஆட்டம் இருப்பதால், சற்று நம்பிக்கை இருக்கிறது.
ஒரு கேப்டனாக இப்படி எங்களின் வாய்ப்புக்காக இதர அணிகள் விளையாடும் ஆட்டத்தின் முடிவுக்காகக் காத்திருப்பதில் விருப்பமில்லை. நம் விதி நமது கையில் இருந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தவறு செய்தோம். மிடில் ஓவா்களில் விக்கெட் சாய்க்க முடியாமல் போனது.
விராட் கோலியின் கடின உழைப்பு ஆச்சா்யப்படுத்துகிறது. மொத்த உலகமும் அவா் ஃபாா்மில் இல்லை எனக் கூறிவரும் நிலையில், இதுபோன்ற ஒரு ஆட்டத்தில் அவா் மிக இயல்பாக ரன்கள் சோ்த்தாா். அவரை ஆட்டமிழக்கச் செய்ய பெரிதும் முயன்றும், முடியாமல் போனது’ - முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான் கேப்டன்)