செய்திகள் :

எச்-1பி விசா கட்டண உயர்வு: ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிறுவனங்கள்!

post image

அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பி வருகின்றன.

அமெரிக்க குடியுரிமை பெறாத ஊழியர்களின் நுழைவு விசா மீதான கட்டுப்பாடு என்ற புதிய அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த அறிக்கையின்படி, எச்-1பி விசா திட்டம், தற்காலிகமாக, பெரு நிறுவனங்கள், ஊழியர்களை அமெரிக்காவிற்குள் மிகத் திறமையான அதிதிறன்பெற்ற செயல்பாடுகளைச் செய்வதற்காக கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் குறைந்த ஊதியம், குறைந்த திறமையான ஊழியர்களே போதும் என்ற இடங்களையும் இவர்கள் நிரப்பியதால், அமெரிக்க தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியிருக்கிறது.

அதன்படி, மைக்ரோசாஃப்ட், அமேஸான் உள்ளிட்ட நிறுவனங்கள், எச்-1பி மற்றும் எச்-4 விசா பெற்று தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

நீங்கள் இந்த ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவரா? எச்-1பி விசா பெறுவதில் சிக்கல் அதிகம்!

அமெரிக்காவில் வெளிநாடுகளிலிருந்துச் சென்று பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ள வி... மேலும் பார்க்க

விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிப்பு!

ஐரோப்பாவில் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் விமான சேவை சனிக்கிழமை(செப். 20) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ப்ரஸ்ஸல்ஸ், பெர்லின், லண்டனின் ஹீட்த்ரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமா... மேலும் பார்க்க

இந்தியாவுடன் சண்டை மூண்டால் சவூதி அரேபிய ராணுவம் நிச்சயம் களமிறங்கும்: பாக். அமைச்சர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவூதி அரேபியா ராணுவம் நிச்சயம் களமிறங்கும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்த... மேலும் பார்க்க

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்!

தங்க அட்டை (கோல்டு காா்ட்) குடியுரிமைத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த திட்டத்தின் கீழ், நிரந்திர குடியு... மேலும் பார்க்க

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இதனால், இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியா்: இனவெறி பாதிப்புக்குள்ளானதாக இறப்பதற்கு முன்பு பதிவு

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலங்கா... மேலும் பார்க்க