எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரசார சுற்றுப்பயணம் முதல்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி இதுவரை நான்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் அவரின் ஐந்தாம் கட்ட பயணம் செப்.17 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்.17-இல் தருமபுரி மாவட்டம் அரூரில் தொடங்கி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இந்த சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்- ஐந்தாம் கட்டம் #மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#EPSfor2026pic.twitter.com/Pe2fJzpzWk
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 7, 2025