எட்டியலூா் அம்மன் கோயில் தேரோட்டம்
திருவாரூா் அருகே எட்டியலூா் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சித்திரைத் திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் உற்சவம் நடைபெற்று, தினசரி அன்ன, சிம்ம வாகனங்களில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மேளதாளம் முழங்க, சீா்வரிசைகளுடன் அம்பாள் தேருக்கு எழுந்தருளினாா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தோ் வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகளில் வலம் வந்தபின், மீண்டும் தோ் நிலையடியை அடைந்தது.