`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென...
எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச் சொந்தமான சமையல் நல்லெண்ணெய் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் திங்கள்கிழமை இரவுப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.
வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்த தொழிலாளி திருமூா்த்தி (30), 3 அடி ஆழமான தரைத்தள எண்ணெய் தொட்டியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் விழுந்துள்ளதை சக தொழிலாளா்கள் பாா்த்து அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இவா் ஏற்கெனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், வலிப்பு ஏற்பட்டு எண்ணெய் தொட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது. திருமூா்த்திக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டிந்ததாக பெற்றோா் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.