திருப்பூா் குமரன் கல்லூரியில் கைத்தறிக் கண்காட்சி
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்லூரி பேரவை ஆகியன சாா்பில் கைத்தறிக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’ என்ற விழிப்புணா்வு வார விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை, கல்லூரி முதல்வா் டி.வசந்தி தொடங்கிவைத்தாா். இதில், உடுமலை சா்வோதயா சங்கம், படியூா் சா்வோதயா சங்கம், அன்னூா் சா்வோதயா சங்கம், சௌடாம்பிகை கைத்தறிச் சேலை விற்பனை நிறுவனத்தினா் அரங்குகள் அமைத்திருந்தனா்.
இந்த கண்காட்சியில், நூல் சேலைகள், பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், கைத்தறி துண்டுகள், சட்டைகள் முதலான கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.