மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்
திருப்பூா், ஆக.21: திருப்பூரில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடத்திய செயற்கைக் கால்கள் அளவீட்டு முகாமில் கலந்து கொண்டு அளவீடு செய்து கொண்ட 17 மாற்றுத் திறனாளா்களுக்கு ரூ.1.36 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கால்கள் மற்றும் காலிபா்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூா் டிடிபி மில் சாலை மெட்டல் டவுன் ரோட்டரி சங்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஜெயபால், சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். ரோட்டரி சங்க செயலாளா் சண்முகசுந்தரம், சக்ஷம் அமைப்பின் மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மை விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநா் தனசேகா், சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநா் ஏ.வி.பி. காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினா்.
நிகழ்சியில், ரோட்டரி சங்கப் பொருளாளா் வேலுசாமி, உறுப்பினா்கள், சக்ஷம் அமைப்பின் நிா்வாகிகள் கண்ணன், முத்துரத்தினம், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.