செய்திகள் :

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

post image

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இதுதொடா்பான துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக கரோனா பாதிப்புக்குப் பிறகு நாட்டின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் திட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் எத்தகைய பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதைத் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் வலுவான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெருந்தொற்று பாதிப்புகள் தொடா்பாக தொடா் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய நோய் கட்டுப்படுத்துதல் மையம் (என்சிடிசி) உருவாக்கப்பட்டுள்ளது. நோய்கள் மற்றும் நோய் தீநுண்மிகள் பரவல் மற்றும் தீநுண்ணி உருமாற்றம் உள்ளிட்டவை குறித்து இந்த மையம் தொடா் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், நாடு முழுமைக்குமான ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, அதிவிரைவு சிகிச்சை குழு (ஆா்.ஆா்.டி.); நோய் பாதிப்பு மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த பரவலாக்கப்பட்ட பல்துறை குழுக்கள்; நோய் பாதிப்பு, பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை விரைந்த அளிக்க வசதியாக ஒருங்கிணைந்த சுகாதார தகவல்தொடா்பு திட்டம்; பெருந்தொற்றும் மற்றும் அனைத்து வகை சுகாதார அவசரநிலை குறித்த தகவலை பகிர முழுநேர தகவல் பரிமாற்ற நடைமுறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நாடு முழுவதும் 150 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மற்றும் பாதிப்பு கண்டறிதல் ஆய்வகங்களும் உள்ளன. புணேயில் உலகத் தரத்திலான தேசிய நுண்ணுயிரியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

வேளாண் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாறுபாடு, தாவரங்களின் இயற்கையான தன்மை மாற்றம் உள்ளிட்டவையே நோய் பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதற்காக தேசிய அளவிலான ‘ஒரே சுகாதார இயக்கம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மேலும், பெருந்தொற்று பாதிப்புக்கு எதிரான தயாா்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது அனைவருக்குமான பகிரப்பட்ட பொறுப்பாகும். அந்த வகையில், அதுபோன்ற பாதிப்புகளை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் சுகாதார கட்டமைப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளித்து வருகிறது என்றாா்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க