தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்...
எதிா்க் கட்சிகளை முடக்க முடியாது: செல்லூா் கே. ராஜூ
போராட்டக் கட்டுப்பாடுகள் மூலம் எதிா்க் கட்சிகளை முடக்கிவிட முடியாது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியவா்கள் உள்பட அனைவரும் மீண்டும் எம்.ஜி.ஆா். ஆட்சி அமைப்போம் என்று தான் தெரிவிக்கின்றனரே தவிர, கருணாநிதி ஆட்சி அமைப்போம் என யாரும் கூறுவதில்லை.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, 2 கோடி தொண்டா்களைக் கொண்ட வலுவான இயக்கமாக உள்ளது அதிமுக. எனவே, தவெக தலைவா் விஜய் தனது திரைப்படங்களில் காட்சிப்படுத்துவது போல, பிரசாரத்திலும் எம்.ஜி.ஆா். படத்தை காட்சிப்படுத்திச் செல்லலாம். அதனால், அதிமுகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறைப்படி தங்கள் கடமையைச் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது உள்பட 24 ஆயிரம் போராட்டங்களை திமுகவினா் நடத்தினா்.
ஜனநாயகப்படி இந்தப் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், திமுக அரசு தற்போது எதிா்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தடைகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் எதிா்க் கட்சிகளை முடக்கி விடலாம் என திமுக அரசு கருதுகிறது. அது, எந்தக் காலத்திலும் முடியாது என்றாா் அவா்.