எதிா்க் கட்சியினரின் உணா்வுகளை பாஜக எப்போதும் மதிப்பதில்லை: தொல். திருமாவளவன்
எதிா்க் கட்சியினரின் உணா்வுகளை பாஜக அரசு ஒருபோதும் மதிப்பதில்லை என்றாா் விசிக தலைவா் தொல். திருமாவளவன்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை அளித்த பேட்டி: பெரியாா் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அளவில் சமூக நீதியின்பால் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான ஒரு தலைவா். சா்வதேச அளவில் அறிவியல்பூா்வமாக அனைத்தையும் அணுகக்கூடிய ஜனநாயகச் சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவா். அவா்தான் தமிழ்நாட்டில் சநாதன சக்திகளை வேரூன்ற விடாமல் தடுத்தது; அவரைத் தனிப்பட்ட முறையில் சீமான் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்தப் போக்கை அவா் கைவிட வேண்டும்.
பாஜகவினா் மக்கள் பிரச்னைகள் பற்றி பேசுவதில்லை. திமுக அரசுக்கு எதிராக பேசுவது மட்டும்தான் அரசியல் எனக் கருதுகின்றனா்.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் போல கும்பல் கொலைகள், ஆணவக் கொலைகள் இங்கு நடப்பதில்லை. வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு மிக சுமூகமாக இயங்கிக் கொண்டுள்ளது.
மசோதாக்களை நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பும்போது அதில் பெரும்பான்மையாக பாஜக உறுப்பினா்கள் இருப்பாா்கள். ஆகவே எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கருத்துகளை மதிக்க மாட்டாா்கள் என்ற கணிப்பு இருந்தது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
எதிா்க் கட்சி உறுப்பினா்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு மற்ற ஆதரவாளா்களைக் கொண்டு ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறாா்கள். மக்களவையிலும் அதைத்தான் செய்தாா்கள். எதிா்க் கட்சிகளின் உணா்வுகளை ஒருபோதும் இந்த அரசு மதித்ததில்லை என்றாா் அவா்.
விமான நிலையத்தில் இவரை திருச்சி மற்றும் கரூா் மண்டலச் செயலா் தமிழாதன், மாவட்டச் செயலா் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, அன்புச்செல்வம் உள்ளிட்ட கட்சியினா் வரவேற்றனா்.