உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!
`எத்தனை மோடி, இரவிகள் வந்தாலும்... மக்களின் மொழி உணர்வை வீழ்த்த முடியாது!' - சு.வெங்கடேசன் காட்டம்
தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்.பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
``தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் ஆளுநர் ஆர். என் ரவி கலந்துரையாடி இருக்கிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.

ஹிந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென்மாநில மொழிகளையும் கூட, படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது" என்று தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது“ என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.
“தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.“ என்று ஆளுநர் கூறுகிறார்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 28, 2025
மாநில மொழிகளை அழிக்கவும், அதிகாரத்தை பறிக்கவும் இந்துத்துவா கும்பலுக்கு அந்த தேவையுள்ளது. அதனை எதிர்த்து எங்களின் மொழியையும், உரிமையையும் காப்பாற்ற வேண்டியத் தேவை எங்களுக்கு உள்ளது.… https://t.co/CcoS8xt175
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்.பி வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "மாநில மொழிகளை அழிக்கவும், அதிகாரத்தை பறிக்கவும் இந்துத்துவா கும்பலுக்கு அந்த தேவையுள்ளது. அதனை எதிர்த்து எங்களின் மொழியையும், உரிமையையும் காப்பாற்ற வேண்டியத் தேவை எங்களுக்கு உள்ளது. இந்த போரில் எத்தனை மோடிக்கள் வந்தாலும், எத்தனை இரவிகள் வந்தாலும் மக்களின் மொழி உணர்வை ஒரு போதும் வீழ்த்த முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.