செய்திகள் :

எனக்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறாரா? டிடிவி தினகரன் விளக்கம்!

post image

எனக்குப் பின்னால் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

”மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். துரோகம் புரிந்த பழனிசாமி எங்களை சந்திக்கவே தயங்கும்போது, கூட்டணிக்கு எப்படி வருவார். அகங்காரத்தில் பேயாட்டம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் உடன் பேசத் தயார் என்று நயினார் நாகேந்திரன் சும்மா சொல்கிறார். பழனிசாமியைத் தவிர வேறு யார் மீதும் வருத்தமில்லை, இபிஎஸ் போதும் என நயினார் நாகேந்திரன் நினைக்கிறார். அவர் பழனிசாமியை தூக்கிப்பிடித்ததே நாங்கள் கூட்டணியிலிருந்து விலகக் காரணம்.

எனக்காக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்கு நான் பேசாமல் வேறு யார் பேசுவது? விரைவில் செங்கோட்டையனை நான் சந்திப்பேன். நீங்கள் நினைக்காத கூட்டணி அமையும்.

என் பின்னால் அண்ணாமலை இருப்பதாகவும் செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதாகவும் கூறுவதில் உண்மையில்லை. தவெகவுடன் நாங்கள் செல்லவுள்ளதாக கூறுவது ஊடக வியூகம். ஆனால், விஜய் மீது எங்களுக்கு பொறாமையில்லை” என்றார்.

இதையும் படிக்க: அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

AMMK General Secretary TTV Dhinakaran has given an explanation to the question, "Is former BJP state president Annamalai behind me?"

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாட... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடும... மேலும் பார்க்க

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் ம... மேலும் பார்க்க

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ஹரித்வார் புறப்பட்டுள்ளார்.ஹரித்வார் செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த செங்கோ... மேலும் பார்க்க

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்ப உள்ளார். சென்னை வந்திறங்கும் அவருக்கு விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

- காபிரியேல் தேவதாஸ், ஊடகவியலாளர்அரசியலுக்கு நடிகா்கள் வருவதில் தவறில்லை. திரைத் துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் ஆகியோா்... மேலும் பார்க்க