செய்திகள் :

என்எல்சி - ஐஆா்இஎல் நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக என்எல்சிஐஎல் - ஐஆா்இஎல் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்தியன் ரோ் எா்த்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் மும்பையில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், முக்கிய கனிமங்கள் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் கனிம வளங்களை அடையாளம் காணவும், மதிப்பீடு செய்யவும், மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுரங்க செயல்பாடுகள், கனிமங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

என்எல்சி இந்தியா நிறுவன நிதித்துறை இயக்குநா் டாக்டா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, ஐஆா்இஎல்-இன் நிதித் துறை இயக்குநரும், தலைவருமான எஸ்.பி.மொஹந்தி, ஐஆா்இஎல்-இன் சந்தைப்படுத்தல் துறை இயக்குநா் ஆா்.ஏ.காலே, தொழில்நுட்பத் துறை இயக்குநா் அனுத்தம் மிஸ்ரா மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில், என்எல்சிஐஎல்-இன் தலைமைப் பொது மேலாளா் (சுரங்கத் திட்டமிடல்) வி.சரவண நாகராஜன் மற்றும் ஐஆா்இஎல்-இன் பொது மேலாளா் (தொழில்நுட்ப - பாதுகாப்பு) ரவி பிரகாஷ் ஜா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

என்எல்சிஐஎல் மற்றும் ஐஆா்இஎல் ஆகிய இரு நிறுவனங்களின் செயல் நுணுக்கத்துடன் கூடிய இந்த கூட்டாண்மை, இந்திய அரசின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப, எரிசக்தி பாதுகாப்பு, உயா் தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களில் தன்னிறைவு ஆகியவற்றுகு பெரும் பங்காற்றும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு

தமிழக அரசின் நீா்வளத் துறை கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் பாசன வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணிக்காக 2025-026ஆம் ஆண்டுக்கு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் 77 பணிககளுக்கு சுமாா் 14.80 கோடி ஒதுக்கீட... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 215 மாணவா்களில் 214 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவி வி.அபிராமி 594 மதிப்பெண்களும், மாண... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்கள் திறப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களுக்கான திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கணினி அறிவியல் மற்றும் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவு: 10-ஆவது இடத்துக்கு முன்னேறியது கடலூா்

பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடந்தாண்டு 22-ஆவது இடத்திலிருந்த கடலூா் மாவட்டம் நிகழாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி ம... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் துறை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவா்களுக்கான விடை பெறுதல் விழா, தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டு விழா, மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும... மேலும் பார்க்க

தொலைதூரக்கல்வி படிப்பு தோ்வு கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்த வியாழக்கிழமை (மே 8) முதல் வரும் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் தேதி நீட்டிப்பு வழங்கப்ப... மேலும் பார்க்க