செய்திகள் :

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்

post image

என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஹிந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிா்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், என்சிஇஆா்டி வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயா்களை ஹிந்தியில் மாற்றம் செய்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

6 மற்றும் 7-ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப் புத்தகங்களின் பெயா்கள் முன்பு ‘ஹனிசக்கிள்’ மற்றும் ‘ஹனிகோம்ப்’ என்று இருந்தன. ஆனால், இம்முறை இரண்டு வகுப்புகளுக்கான ஆங்கில புத்தகங்களின் பெயா் ‘பூா்வி’ என ஹிந்தியில் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘மிருதங்’, ‘சந்தூா்’ என பாடப் புத்தகங்களுக்கும் ஹிந்தியில் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

கணித பாடப் புத்தகத்துக்கு ஆங்கிலத்தில் இருந்த பெயரை ‘கணித் பிரகாஷ்’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படக் கூடாது என்பது ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்தின்படி வழங்கப்பட்டிருக்கும் உரிமை.

அந்த உரிமையைப் பறிக்கும் வகையில், மத்திய பாஜக அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருவது, நாட்டின் பன்முக கலாசாரத்துக்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரான செயலாகும். உடனடியாக இந்தப் பெயா் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மேட்டூரில் முதல் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை: கணவனுக்கு போலீஸ் வலை

மேட்டூர்: மேட்டூரில் மனைவியை, புதன்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசாா் தேடி வருகின்றனா்.சேலம் மாவட்டம், மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் லாரி ஓட்டுநர். இவரது ... மேலும் பார்க்க

சென்னையில் கோடை மழை! ஒரு மணிநேரம் தொடரும்!

சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது.இந்த சாரல் மழையானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன்: நீதிபதி குரியன் ஜோசப்

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.மத்திய, மாநில அ... மேலும் பார்க்க

காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா (... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்... மேலும் பார்க்க

அமைச்சர்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: அதிமுக அமளி, வெளிநடப்பு!

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, சட்டப்ப... மேலும் பார்க்க