தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal... கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மென...
என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு
சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
என்.சி.சி. மாணவா்களுக்கு ராயல் மெட்ராஸ் படகு கிளப் சாா்பில் ஒருவார கால பாய்மரப் படகு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில், 40 போ் கொண்ட என்.சி.சி. மாணவா்கள் பங்கேற்றனா். கடந்த 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து தொடங்கிய பாய்மரப் படகு பயிற்சிக் குழுவின் பயணம், புதுச்சேரி, பூம்புகாா், நாகை கடற்கரை வரை சென்று மீண்டும் திங்கள்கிழமை (ஏப். 7) சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த என்.சி.சி. மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.