செய்திகள் :

எம்எல்ஏ ரவி கைது: ``இந்த பூச்சாண்டிகளுக்கு அதிமுகவினர் பயப்படுபவர்கள் அல்ல..'' - இபிஎஸ் கண்டனம்

post image

அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  

இதுத்தொடர்பாக பேசியிருக்கும் அவர், “அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி,  அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  கோ.அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

கைது செய்யப்பட்ட அதிமுகவினர்
கைது செய்யப்பட்ட அதிமுகவினர்

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

NEET: ``மூக்குத்தி, தோடில் பிட் எடுத்துச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த கொடுமை'' - சீமான்

செய்தியாளர்களை இன்று சந்தித்த சீமான் நீட் தேர்வு கட்பாடு குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.நீட் தேர்வு குறித்து குறித்து பேசிய அவர், “ நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் ... மேலும் பார்க்க

`சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழக்கு ரத்து ஆகுமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார் என்றும், இந்த ஒப்பந்தத்தைக் காட்டி அமெரிக்க... மேலும் பார்க்க

NEET exam: `பூணூல் கூடாது' மாணவனுக்கு நடந்த சம்பவம்; கர்நாடகாவில் வெடித்த போராட்டம்..

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.மாணவிகளின் ஆடைகளில் இருந்த பொத்தான்களை அகற்றியதாகவும், மூக்குத்தி, தாலி போன்றவற்றை கழற்றச் சொன்னதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், கர்நாடக... மேலும் பார்க்க

Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?

Doctor Vikatan:பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்ல... மேலும் பார்க்க

``அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..'' - பத்மஸ்ரீ பாபா சிவானந்த் மறைவுக்கு மோடி இரங்கல்

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று (மே 3) இரவு காலமானார். 128 வயதான பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இத... மேலும் பார்க்க

Neet: ஆடையில் நிறைய பட்டன் இருந்ததால் தேர்வு எழுத மறுப்பு.. உடனே பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாண... மேலும் பார்க்க