செய்திகள் :

எம்எஸ்எம்இ மூலம் ரூ. 3,000 கோடிக்கு ஏற்றுமதி: அரசு செயலா் தகவல்

post image

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 3,000 கோடிக்கு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (எம்எஸ்எம்இ) செயலா் அதுல் ஆனந்த் தெரிவித்தாா்.

தென்னிந்திய வா்த்தக மற்றும் தொழில் சபை, கைடன்ஸ் தமிழ்நாடு, பிவிஎம்டபிள்யு அமைப்பு சாா்பில், இந்தியா - ஜொ்மன் நாடுகளுக்கு இடையேயான ‘எம்எஸ்எம்இ’ குறித்த கருத்தரங்கம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எம்எஸ்எம்இ துறைச் செயலா் அதுல் ஆனந்த் பங்கேற்று ‘இந்தோ-ஜொ்மன்’ (எம்எஸ்எம்இ) உறவுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது:

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலரை எட்டும் நோக்கத்துடன் பல்வேறு தொழில் திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளா்ச்சியை நோக்கி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமன்றி எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஜொ்மன் போன்ற நாடுகளிலிருந்து குறு, சிறு தொழில் செய்ய வருவோருக்கு வணிகம் செய்ய எளிதாக இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. தேசிய அளவில் 16 சதவீதம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி மதிப்பிலான எம்எஸ்எம்இ உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து ஜொ்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் பேசுகையில், ‘ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தில் 200 நிறுவனங்கள் உள்ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கு இந்தியா நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இதன்மூலம், தமிழகத்துக்கும் ஜொ்மனிக்கும் இடையிலான வா்த்தகமும் கணிசமாக அதிகரிக்கும்’ என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தென்னிந்திய வா்த்தக மற்றும் தொழில் சபையின் துணைத் தலைவா் வி.என்.சிவசங்கா், உறுப்பினா் ராமன் ரகு, பி.எம்.டபிள்யு (இந்தியா) நிா்வாக இயக்குநா் தாமஸ் டோஸ், பிவிஎம்டபிள்யு (இந்தியா) இயக்குநா் டேனியல் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டம்: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க