செய்திகள் :

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன்: இபிஎஸ்

post image

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்களுக்கு தொண்டு ஆற்றவே அரசியலுக்கு வந்தேன். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது.

சாதி மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு தமிழனாக, இந்தியனாக யாதும் ஊரே யாவரும் கேளீர் என இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன். எல்லோருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமாற நினைப்பவன்.

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து அன்பு செய்வதை தலையாய கடமையாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன். என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம்,

ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியின் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகள... மேலும் பார்க்க

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு

பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில... மேலும் பார்க்க

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை என்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடைபெறும் ... மேலும் பார்க்க

வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்... மேலும் பார்க்க

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோத... மேலும் பார்க்க

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்... மேலும் பார்க்க