``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
எம்ஜிஆா் பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை
முன்னாள் தமிழக முதல்வா் எம்.ஜி.ஆா். 108 -ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு, காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கடலோர கிராமமான கிளிஞ்சல்மேடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு, காரைக்கால் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, இணைச் செயலாளா் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நிகழ்வின்போது அதிமுக கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆா். உருவப்படம் அலங்கரித்து வைத்து, கட்சியினா் மரியாதை செலுத்தி, சாலையில் சென்றோருக்கு இனிப்பு வழங்கினா். தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்டத்தின் பல இடங்களில் எம்.ஜி.ஆா். உருவப்படம் வைத்து கட்சியினா் மரியாதை செலுத்தினா். சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.