செய்திகள் :

எம்புரான்: இந்திய சினிமா வரலாற்றில் சாதனை!

post image

இந்திய சினிமா வரலாற்றில் ஒருமணி நேரத்தில் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனையான படம் என்ற புகழை எம்புரான் பெற்றது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், ஒருமணி நேரத்திலேயே 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், உலகப் புகழ் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் ஜெரோம் பிளினும் நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாக சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:என் அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: டிராகன் இயக்குநர் கோரிக்கை!

நிதானம் தேவை இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.23-03-2025ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்ட... மேலும் பார்க்க

தனுஷ் - அஜித் கூட்டணி! தயாரிப்பாளர் சொன்னது என்ன?

நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் அரிதாகவே உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி இணைகிறது. பெரும்பாலும் ஒரே படத்தில் சம அளவ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படத்தின் பெயர் இதுவா?

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு ... மேலும் பார்க்க

டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கேஜிஎஃப் - 2 படத்தைத் தொடர்ந்து யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்த... மேலும் பார்க்க