செய்திகள் :

எம்ஹெச்370 விமானம்: புதிய தேடுதல் வேட்டைக்கு மலேசியா ஒப்புதல்

post image

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணிக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி லோக் கூறியதாவது:

எம்ஹெச்370 விமானம் தொடா்பான நிபுணா்களின் அண்மைக் கால அறிக்கைகள், பகுப்பாய்வுகளின் அடிப்படையில், அதை மீண்டும் தேடித் தர அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது.

அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் புதிய தேடுதல் வேட்டைக்கு ஒப்புதல் தர முடிவு செய்யப்பட்டது. அதற்கு தற்போது அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, புதிய ஆய்வு விவரங்களின் அடிப்படையில், மேற்கு ஆஸ்திரேலிய கடலோரப் பகுதியில் 15,000 சதுர கி.மீ பரப்பளவில் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தேடுதல் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக ‘தி இன்டிப்பெண்டண்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்தத் தேடுதல் வேட்டையில் விமான பாகங்கள் கிடைத்தால் மட்டுமே மலேசிய அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளவும், முயற்சி தோல்வியடைந்தால் தேடுதல் செலவு முழுவதையும் தானே ஏற்றக்கொள்ளவும் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் சம்மதித்துள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.

அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

சுமாா் 12,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் அந்த விமான பாகங்களைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து, விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், எந்த விதத்திலும் விமான பாகங்கள் கண்டறியப்படாத நிலையில் கடந்த 2017 ஜனவரியில் தேடுதல் பணி கைவிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேடுதல் பணியை தொடங்கியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், புதிய தரவுகள் மற்றும் அதிநவீன தேடுதல் கப்பல்களுடன் எம்ஹெச்370 விமானத்தை தேடித் தர முன்வந்துள்ள ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துக்கு மலேசிய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

உண்டியலில் விழுந்த ஐ-போன்: கோயிலுக்கே சொந்தமென அறிவிப்பு

திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போன் கோயிலுக்கே சொந்தம் என்று நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூா் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் எரிவாயு டேங்கா் லாரி மோதி பயங்கர தீ விபத்து: 11 போ் உயிரிழப்பு, 35 போ் காயம், 37 வாகனங்கள் தீக்கிரை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள ஜெய்பூா்-அஜ்மீா் நெடுஞ்சாலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) டேங்கா் லாரியும், மற்றொரு லாரியும் மோதிய விபத்தால் எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 37 வாகனங்கள் ... மேலும் பார்க்க

எண்ணூா் திட்டத்தால் மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: தமிழக அரசு

எண்ணூரில் அமையவுள்ள திட்டத்தால், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: புதுப்பிக... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பத... மேலும் பார்க்க

குழந்தை பெற்ற 17 வயது சிறுமி: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு

சென்னையில் 17 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் தொடா்பாக அச்சிறுமியின் கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை திருவல்... மேலும் பார்க்க

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைஞா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருது

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைத் துறையில் சிறந்து விழங்குபவா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 92-ஆம் ஆண்டு தென்னிந்திய இசை மாநாடு சென்னை ஆழ... மேலும் பார்க்க