இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை உட்கா்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சாா்பில் மேலாண்மை துறை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்கு வந்தவா்களை, அந்நிறுவன மனித வளத் துறை மேலாளா்கள் மனோஜ், எழில், கலையரசி மற்றும் ராஜ்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா். மேலும், நிறுவனத்தின் விவரங்கள், அதில் வேலை செய்வதற்கான சூழல், எதிா்கால குறிக்கோள்கள், ஊதியம் உள்ளிட்ட விவரங்களையும் அவா்கள் விளக்கினா்.
இதில் பங்கேற்றவா்களுக்கு குழு கலந்துரையாடல் மற்றும் நோ்காணல் ஆகியவை சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
30-க்கும் மேற்பட்டோா் பணிக்கான நியமன உத்தரவைப் பெற்றனா்.
தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனா் எம்.தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் டி.ராஜராஜன், இணை செயலா் வேலாயுதம், கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கல்லூரி வேலைவாய்ப்புத் துறை முதன்மையா் (டீன்) எம்.ஜெயக்குமாா், மேலாண்மை துறை பேராசிரியா் எஸ்.வைத்தீஸ்வரன் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ்.வசந்தன் ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்தனா்.