`மே 4-ல் NEET தேர்வு; ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்...' -தேசிய தேர்வுகள் முகமை...
2024-இல் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை: புதுவை சுகாதாரத் துறை
புதுவை மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் சரத் சௌகான் சிறப்பு கலந்தாய்வை வெள்ளிக்கிழமை நடத்தினாா்.
கூட்டத்தில் அதிகாரிகள் கூறுகையில், கொசுக்களால் பரவும் மலேரியா பாதிப்பு ஏற்படவில்லை எனவும், டெங்கு பாதிப்பானது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவித்தனா். அத்துடன், கடந்த 2024 -ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றனா்.
புதுவையில் கொசுக்களை ஆராய்ந்த குழுவினரின் ஆய்வறிக்கைபடி பைலேரியா மற்றும் மலேரியா கொசுக்கள் இல்லை என்பதும், ஆனால் டெங்கு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை உள்ளூா் நிா்வாகம், சுகாதாரத் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.
கடந்த 2024 அக்டோபா் முதல் 2025 ஜனவரி வரை புதுவை மாநிலத்தில் மட்டும் 45,000 வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 3 போ் கொண்ட குழு வீடுகளில் நன்னீா் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த நெகிழி (பிளாஸ்டிக்) டப்பாக்கள், ஆட்டு உரல், இளநீா் குடுவைகள் ஆகியவற்றை அகற்றியுள்ளனா். அத்துடன், புகை மருந்து தெளித்தல், வாய்க்கால்களில் கொசு புழுக்களை அழிக்க மருந்துகள் தெளித்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலைய பைலேரியா களப் பணியாளா்கள் வாய்க்கால்களில் மருந்து தெளித்தும் வருகின்றனா்.
கொசு தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஒத்துழைப்புடன் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.