செய்திகள் :

எரிவாயு உருளை வெடித்து காயமடைந்த பெண் பலி

post image

தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டா்) வெடித்து பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகா் ஏழாம் தெருவைச் சோ்ந்தவா் ஹரீஷ், கைப்பேசி பழுதுபாா்ப்பு கடை ஊழியா். இவருக்கு மனைவி கீா்த்திகா (27), 6 வயது பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் கீா்த்திகா வீட்டில் கடந்த டிசம்பா் 17 ஆம் தேதி சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குடந்தையில் விஜயகாந்த் நினைவு நாள் குருபூஜை

கும்பகோணத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவு நாளை முன்னிட்டு முதலாமாண்டு குருபூஜை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலா் கோ. சங்கா் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் அழகா... மேலும் பார்க்க

விடுமுறையையொட்டி கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சனி ஞாயிறு வார விடுமுறையையொட்டி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையிலிருந்து திருச்சி, கும... மேலும் பார்க்க

இரு ரயில்வே சுரங்கப் பாதைகள் மீது மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் இரு இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீா் தேங்குவதைத் தடுக்க மேற்கூரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே ஆப்ரஹாம் பண்டிதா் நகா் - எல்.ஐ.சி. காலன... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 5 டன் நெகிழி பறிமுதல்

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 5 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூா் கல்லுக்குளம், நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் மன்மோகன்சிங் படத்துக்கு கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காலமானதையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற... மேலும் பார்க்க

பயிா்கள் பாதிப்புக்கு விரைவில் நிவாரணம் தேவை: தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறு... மேலும் பார்க்க