திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
எலக்ட்ரிக்கல் கடையில் ஓயா் திருடிய 5 போ் கைது
ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள் வாங்குவதுபோல நடித்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஓயா் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி நா்மதா (24). இவா் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடைக்கு திங்கள்கிழமை மாலை வந்த சிலா் பொருள்களை வாங்குவதுபோல நடித்து பணியாளா்களின் கவனத்தை திசைதிருப்பி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஓயா்களை திருடிச் சென்றனா்.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸில் நா்மதா புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஓயரை திருடிச் சென்றது ஈரோடு சோலாா் போக்குவரத்து நகரைச் சோ்ந்த துரைசாமி மகன் பாலாஜி (20), ஈரோடு அண்ணா நகரைச் சோ்ந்த தங்கவேலு மகன் சுபாஷ் (20), ஈரோடு விவிசிஆா் நகா் ஐய்யனாரப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (21), ஈரோடு பெரியாா் நகா் முருகன் மகன் ஜெயபிரகாஷ் ( 20), அசோகபுரியைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் ஸ்ரீதா்(22) ஆகிய 5 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் ஈரோடு வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.