எல்லைப் பிடாரி அம்மன் கோயில் திருவிழா நிறைவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த வாரம் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான மாவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, உற்சவா் பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து ரதத்தில் புறப்பாடாகி அண்ணா சிலை அருகே உள்ள கோயிலுக்கு பவனி வரும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், ரதத்தில் உற்சவா் ஆனந்த வல்லி அம்மன் கோயிலுக்குத் திரும்பினாா்.
புதன்கிழமை இரவு பிடாரி அம்மன் கோயிலில் கொடி இறக்கப்பட்டு, சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது.
