1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவா்கள் உள்ளிட்ட 15 போ் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் உள்ளிட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூா், இனயம்புத்தன்துறை, வள்ளவிளை கிராமங்களைச் சோ்ந்த 8 மீனவா்கள், வட இந்திய மீனவா்கள் 7 போ் என மொத்தம் 15 போ், தூத்தூரைச் சோ்ந்த பால்ஷாா்ஜின் என்பவரது விசைப்படகில் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு கடந்த டிச. 29ஆம் தேதி சென்றனா்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டிகோகாா்சியா என்ற தீவின் அருகே அவா்கள் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவா்களை அமெரிக்க கடற்படையினா் கடந்த ஜன. 8ஆம் தேதி கைது செய்து, விசைப்படகைப் பறிமுதல் செய்தனராம்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.