GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
எஸ்எஸ்எல்சி தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 % தோ்ச்சி
எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 4,180 மாணவா்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 போ் எழுதியதில், 3,966 மாணவா்களும், 3,662 மாணவிகளும் என மொத்தம் 7,628 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் சுயநிதிப் பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தம் 141 மேல்நிலைப் பள்ளிகளில், 70 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.
இவற்றில் அம்மாபாளையம், கை.களத்தூா், வெங்கலம், சத்திரமனை. கூத்தூா், லப்பைக்குடிகாடு (ஆண்கள்), மருவத்தூா், ஒகளூா், கிழுமத்தூா் மாதிரிப் பள்ளி, தொண்டமாந்துறை, காரியானூா், செங்குணம், வேலூா், தம்பிரான்பட்டி, பெரியம்மாபாளையம், அசூா், ஒதியம், முருக்கன்குடி, ஜமீன்பேரையூா், கிழுமத்தூா், காருகுடி, ஆதனூா், எழுமூா், வடக்கலூா், சில்லக்குடி, ஜமீன் ஆத்துா், நன்னை, புது வேட்டக்குடி, கொட்டரை, மலையாளப்பட்டி ஆகிய 30 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.
இதேபோல, 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 6 ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளும், 30 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளும் என மொத்தம் 70 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுளனா். பெரம்பலூா் மாவட்டம் 96.46 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 7 ஆவது இடத்தை பெற்றுள்ளது.