செய்திகள் :

எஸ்பிஐ நிகர லாபம் 7% உயா்வு

post image

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.16,891 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.9,164 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,18,193 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,28,467 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,06,734 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,17,427 கோடியாக உயா்ந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னா் 0.64 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் இறுதியில் 0.53 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்தது.கடந்த ஐந்து நாட்களில... மேலும் பார்க்க

நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாளர்களின் திடீர் வேலை விலகல் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் திடீரென பணியைவிட்... மேலும் பார்க்க

கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! ரூ. 10 லட்சம் கோடி இழப்பு!!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை இன்று(பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்... மேலும் பார்க்க

1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி 1.4% வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவை எட்... மேலும் பார்க்க

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!

2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது. கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை ... மேலும் பார்க்க