ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லப் பிராணிகள் விற்பனை அமோகம்!
ஏகனாபுரம் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் ஏகனாபுரம் புறப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை, தவெக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்புகோரி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு
அவர்களின் மனுவை ஏற்று, சில நிபந்தனைகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததுடன், அதற்கான தகுந்த இடத்தையும் தவெக செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பதற்கு தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஏகனாபுரம் திங்கள்கிழமை காலை புறப்பட்டார்.