6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றதாக பரவும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் ஏடிஎம்கள் 3 நாள்களுக்கு மூடப்படும் என வாட்ஸ்ஆப் உள்ளிட் சமூக தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், வரும் நாள்களில் மக்களின் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள், பெருமளவில் பரவக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம். எந்தவொரு தகவலையும் உண்மை என நம்பி ஏமாற வேண்டாம்.
இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக பிஐபி ஃபேக்ட்செக்-இல் (PIBFactCheck) இல் புகாரளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புகாரளிக்க வாட்ஸ்ஆப் எண் - +91 8799711259, மின்னஞ்சல் முகவரி factcheck@pib.gov.in என்ற முகவரியிலும் மக்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசின் பிஐபி அறிவுறுத்தியிருக்கிறது.