செய்திகள் :

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி

post image

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய சா்க்கரை வா்த்தகா்கள் சங்கம் (ஏஐஎஸ்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் தொடங்கி வரும் செப்டம்பா் மாதம் நிறைவடையும் நடப்பு சா்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டில் மொத்த 10 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இந்தச் சூழலில், நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை ஆலைகள் 4,24,089 டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளன. இதில், வெள்ளை சா்க்கரை 3.27 லட்சம் டன்னாகவும், சுத்திகரிக்கப்பட்ட சா்க்கரை 77,603 டன்னாகவும், பச்சை சா்க்கரை 18,514 டன்னாகவும் உள்ளது. மேலும், சுமாா் 25,000 டன் சா்க்கரை ஏற்றுமதிக்குத் தயாா் நிலையில் உள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சோமாலியாவுக்கு அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை ஏற்றுமதியானது. அதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 66,927 டன்னும், இலங்கைக்கு 60,357 டன்னும், ஜிபூட்டிக்கு 47,100 டன்னும் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

தற்போதைய ஏற்றுமதி நிலவரத்தின்படி, மத்திய அரசு அனுமதித்த 10 லட்சம் டன்னில் 8 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.உஜாலா, பிரில், மார... மேலும் பார்க்க

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்த... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 2,975 புள்ளிகள் உயர்வு!

மும்பை: நிலம், வான் மற்றும் கடல் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமா... மேலும் பார்க்க

லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி

சென்னை: நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், பெரும்பாலான வழித்தடங்களில் லாரி வாடகை ஏப்ரல் 2025ல் குறைவாகவே இருந்ததாக ஸ்ரீராம் மொபிலிட்டி இன்று தெரிவித்துள்ளது.லாரி வாடகைகள் ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக... மேலும் பார்க்க