செய்திகள் :

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

post image

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.

இதையும் படிக்க:டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழக்கச் செய்துவிடும். செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார், பாட்னாவில் ஆசியா மருத்துவமனை இயக்குநர் சுர்பி ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் அதிகாரி அதுலேஷ் ஜா சன... மேலும் பார்க்க

120 அடி உயர 2 தேர்கள் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், இருவர் பலியான நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம், உஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்... மேலும் பார்க்க

வீட்டில் நேர்ந்த வெடிவிபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநில... மேலும் பார்க்க

போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி... மேலும் பார்க்க

கைப்பற்றிய பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: தில்லி நீதிபதி வா்மா விளக்கம்

‘தீயணைப்புத் துறையினரால் எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது; என் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு அபத்தமானது’ என்று தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா அளித... மேலும் பார்க்க