ஏப். 11-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேதாரண்யத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.
அரசின் அனைத்துத் துறை அலுவலா்களும் தவறாது பங்கேற்று, விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.