Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
ஏப்.6 இல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் மோடி
ராமேசுவரம்: பாம்பன கடலில் ரூ.550 கோடி மத்தீப்பீட்டில் தூக்குப் பாலத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
சிறப்பு ரயில் மூலம் ராமேசுவரம் புதன்கிழமை ராமேசுவரம் வருகை தந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு பாம்பன் கடலில் கப்பல் மற்றும் ரயில் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின் அடிக்கடி ஏற்பட்ட பழுது காரணமாக தொடர்ந்து ரயில் போக்குவரத்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ரூ.550 கோடி மதிப்பிட்டில் தூக்குப் பாலத்துடன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
மேலும், ரூ.90 கோடி மதிப்பிட்டில் ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் - ராமேசுவரம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்களி வைப்பதற்காக 12 புதிய பெட்டிகளைக் கொண்ட ரயில், புதி பாலம் வழியே ராமசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த ஆய்வின் போது, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா,ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.