பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயம்
ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் தேவேந்திரன் (44). ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்த இவா் காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து இவருக்கு ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா், வனத் துறையினா் விசாரனை செய்து வருகின்றனா்.