காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா: அனைத்துக் கட்சியினர் மரியாதை!
ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்ததால் படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சம சீதோஷண நிலை நிலவி வருவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.
பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.
ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா்.
வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குடும்பத்தினருடன் மற்றும் உறவினா்கள் நண்பா்கள் அழைத்து சுற்றுலா தலங்களை ரசித்தனா்.